கெஹெலியவின் மகனுக்கு விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை ஜூன் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரமித் ரம்புக்வெல்லவை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும் அதிரடி கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) மகன் ரமித் ரம்புக்வெல்ல (Ramith Rambukwella) இலஞ்ச, ஊழல், ஒழிப்பு ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (20) குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
"ஊழல் குற்றத்தைச் செய்ததாக" இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (20) உத்தரவிட்டார்.
வாக்குமூலம் வழங்குதல்
அத்துடன் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் சந்தேக நபராகப் பெயரிடவும் நீதவான், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுமதி வழங்கினார்.
அதன்படி, வாக்குமூலத்தை வழங்குமாறு நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சந்தேகநபர் ரமித் ரம்புக்வெல்ல இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
