சிறையில் இருந்தும் உத்தியோக பூர்வ வாகனத்தை கையளிக்காத கெஹலிய
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டதிலிருந்து, அவர் அமைச்சராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களும் இன்னும் அவரது குடும்ப உறுப்பினர்களால் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சருக்கு விஜேராம மாவத்தையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லமும் இதுவரை கையளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரி ஒருவர் தடுப்புக் காவலில் இருந்தால்
அரசு அதிகாரி ஒருவர் தடுப்புக் காவலில் இருந்தால், அவர் பெற்றுள்ள சலுகைகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படும். எனவே, முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்லவுக்கு ஏன் விசேட கவனம் செலுத்தப்படுகிறது என அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்கள் அதே உத்தியோகபூர்வ வாகனங்களில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருவதாகவும் அந்த அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச வாகனங்களில் சிறைக்கு வரும் குடும்பத்தினர்
ஒரு டொயோட்டா பிராடோ மற்றும் மெர்சிடிஸ் ரக வாகனத்தை அவரது குடும்பத்தினர் அவரைப் பார்க்க பயன்படுத்துகின்றனர்.
600க்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும், முன்னாள் சுகாதார அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்களால் இந்த வாகனங்கள் இன்னும் பயன்படுத்தப்படுவது சந்தேகத்திற்குரியது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |