அத்தனகலு ஓயா, களனி கங்கை நீர்மட்டம் உயர்வு: பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அத்தனகலு ஓயா மற்றும் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதைத் தொடர்ந்து, பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, அத்தனகலு ஓயாவின் நீர்மட்ட உயர்வு காரணமாக திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதை அடுத்து, ருவன்வெல்ல, சீதாவக்கை, தொம்பே, தெஹியோவிட்டை, எஹலியகொடை, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கொஹுபிட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிறு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |