களனி பல்கலை விஞ்ஞானபீட மாணவர்களுக்கு கொரோனா - நிர்வாகம் மீது கடும் குற்றச்சாட்டு
களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் நான்கு மாணவர்களுக்கு கொவிட் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு தேர்வுகளுக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் குழுவே வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளது. எனவே முறையான எழுத்துபூர்வ அறிவிப்பு இல்லாமல் மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், இன்று (28) முதல் உணவகம் மூடப்பட வேண்டும் என்றும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஏனைய பீட மாணவர்கள் ஒரு தங்குமிட தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு அனுப்பப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டாலும், இங்கு தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நிர்வாகத்தின் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாகவும் மற்றும் நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவுகள் சமூகத்தில் அதிகளவில் கொரோனாவைப் பரப்புவதாகவும் விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.
