கிளிநொச்சியில் சீருடையுடன் மனித எச்சம் கண்டுபிடிப்பு
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
Nothern Province
Srilankan Tamil News
By Kathirpriya
கிளிநொச்சி (Kilinochchi) பளை காவல் பிரிவுக்குட்பட்ட முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவன பணியாளர்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த பல மனித எச்சங்களுடன் சீருடை ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (26) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கண்ணிவெடி அகற்றும் குழுவினர் பளை காவல்துறையினருக்கு அறிவித்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி நீதவான் குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வுப் பணிகளை நாளைய தினம் (29) மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் பணித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி