யாழில் சிக்கிய பெருமளவிலான கஞ்சா! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
Kerala cannabis
Sillalai
NavyMedia
SriLanka Navy Media
By Chanakyan
யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பை அண்மித்து சில்லாலையில் 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா கடற்படையின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சில்லாலையில் தேடுதல் மேற்கொண்டபோது கவனிப்பாரற்று காணப்பட்ட பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கிலோ கஞ்சா காணப்பட்டதை அவதானித்த கடற்படையினர் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பொலிசார் நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று மாலை கைப்பற்றப்பட்ட 240 கிலோ கேரள கஞ்சா யாவும் கொரோனா அச்சம் காரணமாக கடற்படையினரால் தீயிட்டு அழிக்கப்பட்டன.
இவை இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றன.


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்