தமிழக பாஜக துணைத் தலைவராக நடிகை குஷ்பூ நியமனம்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக நடிகை குஷ்பூ (Kushboo) நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், நடிகை குஷ்பூ, கரு.நாகராஜன், சக்கரவர்த்தி, V.P.துரைசாமி, K.P.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், AD சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், மா.வெங்கடேசன், K.கோபால்சாமி, N.சுந்தர் ஆகியோர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில நிர்வாகிகள்
இதுதொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
மரியாதைக்குரிய தேசிய தலைவர் திரு.@JPNadda அவர்களின் ஒப்புதலுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) July 30, 2025
செய்யப்படுகிறார்கள். ..!
தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..!
- மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்கள் #TNBJPOfficeBearers2025 pic.twitter.com/OXkfZu3Wje
குறித்த பதவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஒப்புதலுடன் தமிழக பாஜகவுக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
