கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு
புதிய இணைப்பு
கண்டி (Kandy) - தவுலகல பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் (Ampara) வைத்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி கண்டி (Kandy) - தவுலகல பகுதியில் வைத்து வேன் ஒன்றில் வந்த மர்ம கும்பல் ஒன்று காம்பொல - மரியாவத்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாத்திமா ஹமீரா என்ற பாடசாலை மாணவியை கடத்திச் சென்றிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் கடந்த 11 ஆம் திகதி கண்டுபிடக்கப்பட்டதுடன், மறுநாள் அதாவது 12ஆம் திகதி கம்பளை பகுதியில் வைத்து, குறித்த வாகனத்தின் சாரதி தவுலகல காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை (13.01.2025) அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தாயின் தம்பியான தனது மாமாவின் மகளையே இவ்வாறு அழைத்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த சந்தேக நபர் ஜப்பானில் பணிபுரிந்ததாகவும், மாமாவிடம் தனது பணம் கொடுக்கப்பட்டதாகவும், பணத்தை தராததால் தான் இதுபோன்ற நடவடிக்கை எடுத்து 50 இலட்சம் ரூபா கப்பம் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
இத தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதுடன் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
கண்டி (Kandy) - தவுலகல பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் (Ampara) வைத்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை வேனில் வந்த மர்ம கும்பல் ஒன்று கடந்த 11ஆம் திகதி கடத்திச் சென்றிருந்தது.
இந்த நிலையில் நேற்றையதினம் (12) இது தொடர்பான சீசீடிவி காட்சிகள் வெளியான நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலதிக விசாரணை
இதன் போது, கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வேன் நேற்றுமுன் தினம் (11.01.2025) பொலன்னறுவை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலன்னறுவை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று (12.01.2025) கம்பளை பகுதியில் வைத்து, குறித்த வாகனத்தின் சாரதி தவுலகல காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று (13.01.2025) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தாயின் தம்பியான தனது மாமாவின் மகளையே இவ்வாறு அழைத்து வந்ததாக குறித்த கடத்தலை நடத்திய இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |