சிறுநீரக நோயாளிகள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம்
பொலனறுவை சீறுநீரக சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுநீரக நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் குழு ஒன்று மருத்துவமனையின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக பிஸ்டியுலா ஊசிகள் பற்றாக்குறை இருப்பதால், தனியார் மருந்தகங்களில் 900-1000 ரூபாய் விலையில் அவற்றை வாங்க வேண்டியிருப்பதால், தமக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
ஊசிகளை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
இந்தப் போராட்டத்தின் மூலம் நோயாளிகளின் முக்கிய கோரிக்கை மருத்துவமனைக்குத் தேவையான பிஸ்டியுலா ஊசிகளை வழங்க வேண்டும் என்பதாகும்.
தற்போது, மருத்துவமனையில் பதிவுசெய்யப்பட்ட கிட்டத்தட்ட 600 நோயாளிகள் இந்த ஊசி பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் குறிப்பிட்டது போல, இந்தப் பிரச்சினை குறித்து ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருக்கு முன்னர் பல கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திய போதிலும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
மேலும், உயிரைத் தக்கவைக்க அவசியமான இரத்த சுத்திகரிப்பு செயல்முறைக்குத் தேவையான பிஸ்டில் ஊசிகளை அவசரமாக வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
