வயோதிப பெண்ணின் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பு பணத்தை சுருட்டிய மூவர் கைது
CID - Sri Lanka Police
Lottery
Money
By Sumithiran
வயதான ஒரு பெண்ணின் அதிஷ்ட இலாப சீட்டிலிருந்து ரூ. 96,298,759.58 தொகையை மோசடியாகப் பெற்றதற்காக சீட்டிழுப்புவிற்பனை முகவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒரு பெண்ணும் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 18, 2024 அன்று, ஹப்புத்தளை பகுதியில் உள்ள ஒரு பெண், தொகுதி எண் 1630 இன் கீழ் தன நிதான லொட்டரி சீட்டில் மேற்படி பரிசை வென்றுள்ளார்.
லொட்டரியில் விழுந்த பணத்தை மோசடியாக பெற்றவர்கள்
மேலும் சந்தேகத்திற்குரிய லொட்டரி விற்பனை முகவரும் மற்ற இரண்டு சந்தேக நபர்களும் மேற்படி தொகையை மோசடியாகப் பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையின் இரண்டு சிறப்பு புலனாய்வுப் பிரிவுகளால் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்