இரண்டாவது போட்டியிலும் அபார வெற்றியீட்டியது கிளி. யுனைட்டட் அணி
இலங்கை கிரிக்கெட் சபையினூடாக கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினால் நேற்றைய தினம் நடைபெற்ற பிரிவு III இற்கான இரண்டாவது போட்டி, கனகபுரம் மாவட்ட துடுப்பாட்ட சங்க மைதானத்தில் கிருஷ்ணபாரதி விளையாட்டு கழகம் மற்றும் யுனைட்டட் விளையாட்டுக் கழகம் இடையே நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யுனைட்டட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி 46.2 ஓவர்களில் 328 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் அவ்வணி இழந்தது.
துடுப்பாட்டத்தில் சாதிப்பு

துடுப்பாட்டத்தில் ஜெனுசன் 85 ஓட்டங்களையும், தனுஐன் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 67 ஓட்டங்களையும், சுபிகரன் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிருஷ்ணபாரதி விளையாட்டுக்கழகம் 18.3 ஓவர்களில் 70 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
பந்து வீச்சிலும் கலக்கல்

பந்து வீச்சில் ஜீவன் 9 ஓவர்கள் பந்து வீசி 40 ஓட்டங்களை கொடுத்து 5 இலக்குகளையும் , சுபிகரன் 6 ஓவர்கள் பந்து வீசி 08 ஓட்டங்களை கொடுத்து 3 இலக்குகளையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் யுனைட்டட் விளையாட்டுக்கழகம் 258 ஓட்டங்களால் இலகு வெற்றியை பதிவு செய்தது.
றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணை பூரண ஆதரவு

இச்சுற்றுப்போட்டி ஆரம்பிப்பதற்கு முதல் வீரர்களுக்கான சீருடை மற்றும் ஊக்கப்படுத்தல் செயற்பாடுகளில் இயக்கச்சி றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணை பூரண ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிட்டத்க்கது.
மேற்படி சுற்றுத்தொடரின் கிண்ணத்தை கைப்பற்றுவதை நோக்காக கொண்டு யுனைட்டட் அணி தங்கள் ஒவ்வொரு நகர்வையும் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.



தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 53 நிமிடங்கள் முன்