காவல்துறை மீது வாள்வெட்டு வன்முறை- திடீர் முற்றுகையில் களமிறங்கிய அதிரடிப்படை!
தருமபுரம் கல்லாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினரால் திடீர் முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 04.10.2021 அன்று இரு குழுக்களுக்கிடையிலான மோதலின் போது பாதுகாப்புகடமைக்காக சென்ற காவல்துறை மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அச்சம்பவத்தில் நான்கு காவல்துறை உத்தியோகஸ்கத்தர்கள் காயமடைந்துள்ளனர். அதனையடுத்தே இன்றைய தினம் தருமபுரம் காவல்துறை மற்றும் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிபடையினர் இணைந்து குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்குடன் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.
இச்சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்த மோட்டார் சைக்கில்கள் 4 மற்றும் வாள் 1 இடியன் துப்பாக்கி 1 சட்டவிரோத கசிப்பு 18 லீற்றர் கசிப்பு விற்றபனையிலீடுபட்டிருந்த பெண் உட்பட இச்சுற்றிவளைப்பின் மூலம் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தருமபுரம் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சிசெர தெரிவித்துள்ளார்.



