ஆரம்பமானது கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இன்று (28) பகல் 9.30 மணிக்கு கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தலைமையின் கீழ் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் (N. Vethanayagan) அவர்களின் பங்கேற்புடன் நடைபெறுகின்றது.
குறித்த கூட்டமானது கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் வரவேற்புரையுடனும் மாவட்டத்தின் அபிவிருத்தி விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட திட்டங்களை வகுத்தல் தொடர்பாகவும் உடனடி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
