சென்னை அணியை வீழ்த்தியது ரோயல் செலஞ்சர் அணி
புதிய இணைப்பு
ஐபிஎல் (IPL) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி (CSK) பெங்களூர் ரோயல் செலஞ்சர் (RCB) அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியின் நாணயசுழற்சியில் வென்ற சென்னை அணி (CSK) முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
பெங்களூர் ரோயல் செலஞ்சர் (RCB) 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. அதன்படி சென்னை அணிக்கு 197 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து 196 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது
மூன்றாம் இணைப்பு
ஐபிஎல் தொடரின் 8ஆவது லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி (CSK), பெங்களூர் ரோயல் செலஞ்சர் (RCB) அணி மோதுகின்றன.
இந்த போட்டியின் நாணயசுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ஓட்டங்களை குவித்துள்ளது.
அதன்படி, தற்போது சென்னை அணிக்கு 197 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
ஐ.பி.எல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ஆர்சிபி அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற சி.எஸ்.கே அணி தலைவர் ருதுராஜ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
18 ஆவது ஐ.பி.எல். (IPL) கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது.
8 ஆவது லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி (CSK), பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி மோதுகின்றது.
குறித்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் (Chepauk Chennai) உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு நடைபெறவுள்ளது.
சென்னை அணி
இன்றைய போட்டியானது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஐபிஎல் போட்டியில் இதுவரை இந்த இரண்டு அணிகளும் 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில் 21 முறை சென்னையும், 11 முறை பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கப்டன்), ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஷிவம் துபே, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டோனி, ஆர்.அஸ்வின், நாதன் எலிஸ் அல்லது பதிரானா, நூர் அகமது, கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், பெங்களூர் அணியில் விராட் கோஹ்லி, பில் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), தேவ்தத் படிக்கல் அல்லது மொகித் ரதீ, லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, ராசிக் சலாம் அல்லது புவனேஷ்வர்குமார் அல்லது ஸ்வப்னில் சிங், ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா ஆகியோர் விளையாடவுள்ளர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
