அதிகரிக்கும் கொரோனா- கிளிநொச்சியில் சட்ட நடவடிக்கைக்குள்ளாக்கப்பட்ட உணவகங்கள்!
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இரண்டு சைவ உணவகங்கள் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை மீறிய காரணத்தினால் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரைச்சி பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நகரில் இருந்த உணவகங்களில் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர். இதன் போது இரண்டு சைவ உணவகங்கள் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது வியாபார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டமை அவதானிக்கப்பட்டதையடுத்து சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
ஆனால் குறித்த உணவகத்தினர் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்ததோடு, அவர்களின் கடமைகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியிருந்தனர். இதன் காரணமாக கரைச்சி பிரதேச சுகாதார பிரிவினரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஒரு உணவகத்திற்கு 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதோடு,
உணவகத்தை பூட்டி சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப சீரமைத்த பின்னர் பொதுச்
சுகாதார பரிசோதகர்களின் அறிக்கையினை சமர்பித்து திறக்குமாறும், மற்றொரு
உணவகத்திற்கு 16 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கிளிநொச்சி நீதவான்
நீதிமன்றம் விதித்துள்ளது என கரைச்சி பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள்
தெரிவித்துள்ளனர்.