கிளிநொச்சியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் வாள்களுடன் சிக்கிய நபர்கள்
கிளிநொச்சியில் (Kilinochchi) நான்கு வாள்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை கிளிநொச்சி காவல் பிரிவுக்கு உட்பட்ட கோணாவில் பகுதியில் நேற்று (30) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கோணாவில் பகுதியில் நேற்றைய தினம் (30) சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய நான்கு சந்தேக நபர்கள் கிளிநொச்சி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை சோதனையிட்ட பொழுது மறைத்து வைத்திருந்த நான்கு வாள்களும் மற்றும் ஏழு மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கிளிநொச்சி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் நாளை (01) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
