தமிழரசுக் கட்சியில் ‘நானும் ரவுடிதான்’ பிரமுகர் வாங்கிய ‘பல்ப்பு’
முல்லைத்தீவில் இருந்து சீவிச் சிங்காரித்துகொண்டு கிளம்பும் ஒரு தமிழரசுக்கட்சிப் பிரமுகர் நேற்று கிளிநொச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ‘பல்ப்பு’ வாங்கிய சோகக் கதைதான் தற்பொழுது கட்சி இளைஞர்கள் மத்தியில் உலவிக்கொண்டு திரிகிறது.
எந்த நேரமும் தன்னுடன் ஒரு புகைப்படப்பிடிப்பாளரை கூட்டிக்கொண்டு அலைந்து திரியும் அந்தப் பிரமுகர், மரணவீடானாலும் தான்தான் பிணமாக போட்டோவுக்கு போஸ்குடுக்கவேண்டும் என்று நினைக்கின்ற ஒரு 'கொமடி பீஸ்'.
நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட இழுபறியில் இளைஞர்கள் சிலரை காவல்துறையினர் கைதுசெய்தார்கள் அல்லவா.. எப்படியாவது தானும் அங்கு கைதுசெய்துவிடப்படவேண்டும் என்று படாது பாடுபட்டாராம் அந்தப் பிரமுகர்.
வடிவேலைப் போல காவல்துறையினரிடம் கெஞ்சிக்கூடப் பார்த்தாராம் ‘நானும் ரவுடிதான்’ என்று.
காவல் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த மாணவர்களை மீட்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைந்தபோது, தன்னையும் அங்கு அழைத்துச்செல்லும்படி அடம்பிடித்தாராம்.
'சரி வாருங்கள்..' என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அழைக்க, தனது பிரத்தியேக புகைப்பிடிப்பாளரையும் அழைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று அவர் கேட்க, மனுசன்ட ‘பிளானை’ விளங்கிக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘காய் வெட்டிவிட்டு’ தனியாவே சென்றுவிட்டார்களாம்.
அந்த மனுசன் கிளிநொச்சி காவல்நிலையத்தின் முன் நின்று ஒரு போட்டோ எடுத்து முகப்புத்தகத்தில் போட்டு ஒரு வசனம் எழுதிற நல்ல சந்தர்ப்பத்துக்கு ஆப்பு வைத்த அந்த நாடாளுமன்ற உறுப்பினரை சபித்துக்கொண்டிருக்கின்றாராம் முல்லைத்தீவு தமிழரசுக்கட்சியின் அந்த விளம்பர விரும்பி பிரமுகர்.