கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதியின் சகோதரி காலமானார்!
சிறிலங்கா சிறைச்சாலையில் கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதி ஒருவரின் சகோதரி காலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அரசியல் கைதியின் மூத்த சகோதரியான இவர் வயது முதிர்ச்சி காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் காலமானார்.
இவர், கிளிநொச்சியை சேர்ந்த செல்லையா நவரத்தினம் என்ற தமிழ் அரசியல் கைதியின் சகோதரி, இரத்தினம் ராசலெட்சுமி, எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதியின் சகோதரி மரணம்
காலமானவரின் இறுதிக் கிரியைகள், பளையில் இருக்கும் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
காலமானவரின் சகோதரன், செ.நவரத்தினம், 20 வருட கடூழிய சிறை தண்டணை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.
கடூழிய சிறைத்தண்டனை
இவ்வாறான நிலையில், சிறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் தனது மூத்த சகோதரியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான முன்னாயத்தப் பணிகளை ‘குரலற்றவர்களின் குரல் அமைப்பு’ மேற்கொண்டு வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
