இராணுவத்தை களமிறக்க உத்தரவிட்டார் கிம் ஜோங் உன்
வடகொரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்துக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார்.
பேரழிவிலிருந்து மீள்வது குறித்து விவாதிக்கும் ஆளும் தொழிலாளர் கட்சியின் இராணுவ ஆணையத்தின் கூட்டத்தில், வடகொரிய தலைவர் பங்கேற்காத போதும் மக்களுக்கு தேவையான பொருட்களை இராணுவம் மூலம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர் கூறியனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்துக்கு பின் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் சுமார் 5,000பேர் வெளியேற்றப்பட்டதாக அரசாங்கத்தின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வீடுகள் அவற்றின் கூரைகள் வரை வெள்ளத்தில் மூழ்கியிருப்பதையும், கிழக்கு மாகாணமான தெற்கு ஹம்யோங்கில் உள்ள சேதமடைந்த பாலங்கள் மற்றும் ரயில் பாதைகளையும் அரசாங்க தொலைக்காட்சி காட்டியுள்ளது.