ஈழத்தமிழர்களை கொந்தளிக்க வைத்த கிங்டம் திரைப்படம்: வெடித்த கண்டன குரல்கள்
தற்போது இலங்கை தமிழர்களிடையேயும், புலம்பெயர் ஈழத்தமிழர்களிடையேயும் பாரிய சர்சசைக்குரிய பேசுபொருளாக கிங்டம் திரைப்படம் மாறியுள்ளது.
கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் பாக்யஸ்ரீ போர்சே உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஜூலை 31 ஆம் திகதி குறித்த திரைப்படம் வெளியானது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான குறித்த திரைப்படத்தில் ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டியுள்ளதாகவும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்ற ஈழத்தமிழர்களை அடிமைகள் போலவும் மற்றும் தீண்டத் தகாதவர்களை நடத்துவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் கண்டனங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது.
இது தொடர்பில் தமிழ் தரப்பில் பலதரப்பட்ட கண்டனங்கள் வெளியாகி இருந்ததுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகியோரும் தமது கண்டங்களை வெளியிட்டிருந்தனர்.
இது தொடர்பிலும், திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடங்கள், ஈழத்தமிழர்களின் கருத்துக்கள், இலங்கையில் படம் வெளியிடப்பட்டதன் விளைவுகள், இலங்கை அரசியல் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய பார்வை நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா
