கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் : விழிப்புணர்வு கருத்தரங்கு முல்லைத்தீவில்
வவுனியா மற்றும் முல்லைத்தீவு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவென அரசால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டம் அந்த மக்களின்நலன்சார்ந்து முன்னெடுக்கப்படவில்லை எனவும் மாறாக சிங்கள மக்களின் குடியேற்றத்தை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுகிறது.
இதற்கு எதிராக தமது எதிர்ப்பை காட்டவும் வவுனியா வடக்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
விழிப்புனர்வு கருத்தரங்கு
இந்த நிலையில் கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத்திட்டம் தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் இன்று (01) கரைதுறைபற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கருத்தரங்கில் கிழக்கு மாகாண ஓய்வுபெற்ற முன்னாள் காணி ஆணையாளர் கதிராமத்தம்பி குருநாதன் வளவாளராக கலந்துகொண்டதுடன், இதில் வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர், வவுனியா வடக்கு, கரைதுறைபற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் கிவுல் ஓயா திட்டத்தில் பாதிக்கப்படும் மக்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்