நெதன்யாகுவிற்கு ட்ரம்ப் இட்ட கட்டளை : உடன் வெளியேற உத்தரவு
சிரியா மற்றும் லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதாக ஆக்சியோஸ் இன்று செவ்வாயன்று செய்தி வெளியிட்டது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, சிரியப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தின் இருப்பு பதட்டங்களை உருவாக்குவதாகவும், மேலும் பதற்றம் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் ட்ரம்ப் நெதன்யாகுவிடம் கூறியதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
படைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்
"நீங்கள் அங்கு இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. நீங்கள் படைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்," என்று ட்ரம்ப் நெதன்யாகுவிடம் தொலைபேசி உரையாடலின் போது, கூறியதாக, ஆக்சியோஸ் மேற்கோள் காட்டிய ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.

லெபனான் தொடர்பாகவும் l்ரம்ப் இதேபோன்ற கோரிக்கையை விடுத்ததாகவும், ஆனால் இஸ்ரேலுக்கு அதன் எல்லைகளில் பாதுகாப்பு வலயங்கள் தேவை என்று நெதன்யாகு வாதிட்டதாகவும் அது கூறியது.
துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் ஓரத்தில், சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷராவை ட்ரம்ப் சந்தித்த ஒரு நாள் கழித்து இந்த அழைப்பு வந்ததாகவும், இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை ட்ரம்ப் நிர்வாகம் தொடர்வதாகவும் ஆக்சியோஸ் கூறியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |