ஐபிஎல் : இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2024 ஐபில் போட்டித் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் சன்ரைசர்ஸ்(Sunrisers Hyderabad) அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா(Kolkata Knight Riders) அணி தகுதி பெற்றுள்ளது.
அகமதாபாத்(Ahmedabad) நரேந்திரமோடி(Narendra Modi Stadium) மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய
அவ்வணி சார்பில் ராஹுல் திரிபாதி(Rahul Tripathi )அதிகபட்சமாக 55 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி
பதிலுக்கு 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பில் வெங்கடேஷ் ஐயர்(Venkatesh Iyer )51 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர்(Shreyas Iyer ) 58 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர்.
இதன்படி, 2024 ஐபிஎல் தொடரின் முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |