ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகும் முக்கிய அணி தலைவர்
ஐபிஎல் தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
ஒவ்வொரு அணியும் குறைந்தது 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்காக ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடி வருகின்றன.
கடந்த வாரம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் எல்லை கோட்டிற்கு சென்ற பந்தை தடுக்க முயன்ற லக்னோ அணியின் தலைவர் கே. எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.
க்ருணால் பாண்டியா
இதையடுத்து அவர் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார். மேலும் புதன்கிழமை சென்னை அணிக்கு எதிரான் போட்டியில் ராகுல் விளையாடவில்லை.
அவருக்கு பதிலாக க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் தலைவராக செயல்பட்டார்.
இந்த நிலையில் கே.எல்.ராகுல் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் தீவிரம் அடைந்திருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பிரகாசிக்க தவறி வரும் ராகுல் ரசிகர்களிடம் கடுமையான விமர்சங்களை பெற்று இருந்தார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி
கடந்த போட்டியை வழிநடத்திய க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் தலைவராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும் விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு அறிவிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் காயத்தால் விளையாடுவது சந்தேகம் எழுந்துள்ள நிலையில் கே.எல்.ராகுலும் காயம் காரணமாக விலகி இருப்பதால் மாற்று வீரரை தேர்வு செய்ய பிசிசியின் தேர்வு குழு மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
