இரசாயன களஞ்சியசாலையில் தீ விபத்து ஒருவர் பலி
Gampaha
Sri Lanka Police Investigation
Death
By Pradheepan
கந்தானை பிரதேசத்தில் இரசாயன உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான களஞ்சியசாலையில் இன்று (08) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நிறுவனத்தின் கணக்காளர் எனவும் தீ விபத்தின் போது, களஞ்சியசாலைக்குள் இருந்ததால், அவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கம்பஹா மற்றும் நீர்கொழும்பு தீயணைப்பு பிரிவினரும், கடற்படையின் தீயணைப்பு பிரிவினரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் கந்தானை காவல்துறையினர்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.