கொடுத்த கடனை திரும்ப பெற இதோ எளிதான பரிகாரம்
இன்றைக்கு பலரும் பணத்தை ஒருவரிடம் கொடுத்து விட்டு அதனை திரும்ப பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
இத்தகைய நிலை மாறி இழந்த பணத்தை அல்லது செல்வத்தை மீண்டும் பெற முடியுமா? என்றால், நிச்சயமாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
ஆன்மீகம் சார்ந்த எளிய முறைகளின் மூலமாக இழந்த பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக இதோ சில வழிமுறைகள்.
தென்மேற்கு திசை
அயராத உழைப்பினால் சம்பாதித்த செல்வங்கள் மற்றும் சொத்துக்கள், பணம் போன்றவை மீண்டும் உங்களுக்கு கிடைக்க வேண்டுமாயின், தென்மேற்கு திசையில் இப்பரிகாரத்தை செய்தாலே போதும்.
இம்முறை மிகவும் எளிமையான ஒன்றாகவும் அதேசமயம், ஆன்மீக ரீதியாக சக்தி வாய்ந்த பரிகாரமாகவும் கருதப்படுகின்றது.
வளர்பிறை வெள்ளி
எப்போதும் பூஜை அறையில் பூஜை செய்யும் போது ஒரு தாம்பாள தட்டில் பச்சரிசியை பரப்பி அதன் மீது பணத்தை போட்டு வைப்பதனால் தனமும், தானியமும் சேர்ந்து பெருகும் என்பது நம்பிக்கை.
அதுபோலவே, ஒரு சிறிய அளவிலான செம்பு கலசம் அல்லது பித்தளை செம்பு, கண்ணாடி பாத்திரம் ஏதாவது ஒன்றை எடுத்து அதனில் ஒரு கை நிறைய பச்சரிசியை போட்டு அதன் மீது சில்லறை நாணயங்களை வைக்க வேண்டும்.
பின்பு அதன் மீது பச்சரிசியை பரப்பி மூடி வைக்க வேண்டும். தென்மேற்கு திசை கடனை தீர்க்கும் திசையாகவும், இழந்தவற்றை பெற்றுக் கொடுக்க செய்யும் திசையாகவும் இருப்பதனால் பாத்திரத்தை தென்மேற்கு திசையில் வைப்பது என்பது மிக அவசியமான ஒன்றாகும்.
மேலும் இப்பரிகாரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் செய்வதென்பது மிக அவசியமானது ஆகும்.
அப்போதுதான் மீண்டும் மீண்டும் செல்வ சேர்க்கையானது வளர தொடங்கும் என்பது ஐதீகம்.
தீரா துன்பமெல்லாம் தீரும்
தொடர்ந்து ஒவ்வொரு வளர்பிறை வெள்ளியிலும் இதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த அரிசியை வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை. எவருக்கேனும் நீங்கள் தானம் கொடுத்து விடலாம்.
கோவிலுக்கு செல்லும் போது இதை அங்கு வரும் பக்தர்களுக்கு அல்லது யாசகர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.
ஆனால் நீங்கள் வீட்டில் மீண்டும் இந்த அரிசியை பயன்படுத்த கூடாது.
மாதம் இருமுறை வளர்பிறையில் இதை செய்து பாருங்கள். தீராத துன்பமெல்லாம் தீரும், வராத வரவு எல்லாம் வந்து சேரும்.
