விதிமுறைகளை மீறி நடந்த திருமணம்! உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வாழைச்சேனை நான்காம் வட்டாரத்தில் சட்டவிதிமுறைகளை மீறி நேற் திருமண வைபவம் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இவருடன் தொடர்பினை ஏற்படுத்தியவர்கள் விபரம் திரட்டப்பட்டது.
இதன்போது சட்டவிதிமுறைகளை மீறி நடந்த திருமணம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதில் கலந்து கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தலுக்கு உள்ளான நபர்கள் அனைவருக்கும் நாளை பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.