வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் குப்பை பிரச்சினை : தீர்வு காண முன்வந்த வெளிநாடு
கொரியா(south korea) சர்வதேச கூட்டுறவு முகவரகத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் அடிப்படையில் ஊவா(uva) மாகாணம் மற்றும் வட மாகாணத்தை(northern province) மையமாக கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச நிலையான ஒருங்கிணைந்த திடக்கழிவு முகாமைத்துவ மற்றும் பொருளாதார அபிவிருத்தி திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஊவா மற்றும் வட மாகாணங்களில் உள்ளூராட்சி மட்டத்தில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை பொறிமுறையை நிறுவுவதற்காக 2024-2028 காலப்பகுதியில் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கொரிய அரசாங்கம் 10.20 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி மானியமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி
இதன்படி, கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்தி உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்த நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சர் என்ற முறையில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |