தொழில்சார் தகைமை இன்றியும் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு! இலட்சக்கணக்கில் சம்பளம்
இலங்கையர்கள் தொழில்சார் தகைமை இன்றியும் கொரியாவில் தொழில் செய்ய வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
பொருத்துதல் மற்றும் அரைத்தல் போன்ற தொழில்வாய்ப்புகளுக்கு NVQ சான்றிதழ் அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
எட்டரை லட்சம் ரூபாய் வேதனம்
குறித்த தொழில்வாய்ப்புக்களுக்காக ஆரம்ப கட்ட வேதனமாக எட்டரை லட்சம் இலங்கை ரூபா வேதனம் வழங்கப்படுகிறதாகவும் கொரிய மொழியில் தேர்ச்சி இல்லாவிட்டாலும் குறித்த தொழில்களுக்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரியாவிற்கு தொழில்வாய்ப்புக்களுக்காக செல்வோருக்கு அரச வங்கிகளால் கடன் வழங்கும் திட்டம் ஒன்றும் காணப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
