கொட்டாஞ்சேனை மாணவி மரணம்: காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
Colombo
Sri Lankan Peoples
Law and Order
By Dilakshan
கொழும்பு - கொட்டாஞ்சேனையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி தொடர்பான வழக்கு விசாணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.
அதன்போது, மாணவியின் மரணத்திற்கு காரணமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முறைப்பாடு
அத்துடன், அது குறித்த உண்மைகளை ஜூன் 23 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்த மாணவியின் தயாரிடம் மற்றும் அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் தலைவரிடமும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
