கொட்டாஞ்சேனை மாணவி மரணம்: பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Law and Order
By Dhilak
கொழும்பு - கொட்டாஞ்சேனையில் பாடசாலை மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விசாரணை இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதன்போது, கொழும்பு பதில் நீதவான் சம்பத் ஜெயவர்தன முன்னிலையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
கொட்டாஞ்சேனைய காவல்துறையின் வழிகாட்டுதலின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாயாரிடம் சாட்சியம்
முதலில், உயிரிழந்த மாணவி வசித்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் தவிசாளரிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து, மாணவியின் தாயாரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
பின்னர், சாட்சியங்களைப் பதிவு செய்வதை 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்த பதில் நீதவான், அன்றைய தினம் மாணவியின் தாயாரிடமிருந்து மேலும் சாட்சியங்களைப் பதிவு செய்ய உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்