யாழ். வண்ணை வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்(படங்கள்)
Tamils
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Shadhu Shanker
யாழில் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
இந்த உற்சவமானது இன்று(07) நள்ளிரவு நடைபெற்றுள்ளது.
கிருஷ்ண பகவானுக்கு நடைபெற்ற விசேட அபிஷேக ஆராதனையை தொடர்ந்து தீப்பூஜையும் இடம்பெற்றுள்ளது.
உற்சவ கிரியைகள் ஆலய பிரதமகுரு இரமணிதரக் குருக்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.

உற்சவ கிரியைகள்
அதேவேளை, கிருஷ்ணர் பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கிருஷ்ணன் ஆலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதில் பக்த அடியார்கள் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்று சென்றுள்ளனர்.



