குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மட்டக்களப்பு - குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் வழக்கை எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று (27) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான எஸ்.எச்.எம்.மனாறுதீன், முபாறக் மு.அஸ்ஸம் உட்பட சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
வழக்கு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி
குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிதி தொடர்பில் தாமதங்களை உணர்ந்த நீதவான் இந்த வழக்குடன் தொடர்புடைய பங்காளர்கள் அனைவரும் எதிர்வரும் 17ஆம் திகதி 2.00 மணியளவில் நீதிமன்றுக்கு வருகைதந்து கலந்துரையாடலை மேற்கொண்டு ஒரு தெளிவான தீர்மானத்தினை எடுப்பதற்காக நீதவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வழக்கு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்