குருந்தூர் மலைக்கு உரிமை கொண்டாட முடியாது - சிங்கள பௌத்த தரப்புக்கு நெற்றியடி
குருந்தூர் மலைக்கு பௌத்த தரப்பினர் உரிமை கொண்டாட முடியாது
மத அடையாளங்கள் இனத்தின் அடையாளங்களாக கருத முடியாது என்ற அடிப்படையில் குருந்தூர் மலைக்கு சிங்கள பௌத்த தரப்பினர் உரிமை கொண்டாட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குருந்தூர் மலை விடயத்தை முன்வைத்து முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை எச்சரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பிலும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
சார்ள்ஸ் நிர்மலநாதனை எச்சரிக்கும் வகையில் கருத்து
சித்தார்த்தன் உரையாற்றிக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன, விடயதானத்திற்கு அப்பால் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிடுவதாக சுட்டிக்காட்டினார்.
எனினும் சரத் வீரசேகர வெளியிட்ட கருத்துக்களை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகவும் அதற்கு அனுமதி பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தனது உரையை தொடர்ந்தார்.
அவர் ஆற்றிய உரையை காணொளியில் காண்க,,

