தமிழர் மரபுகளைப் பேணிக்காக்க அணிதிரளுங்கள் - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு

Sri Lankan Tamils Mullaitivu University of Jaffna
By Nithusan Aug 17, 2023 06:15 PM GMT
Report

 பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் எமக்கான உரிமைகளை மீட்டெடுக்கவும் எமது மரபுகளை பேணிக்காக்கவும் மக்கள் அனைவரும் குருந்தூர்மலைக்கு நாளை வருகை தந்து பொங்கல் விழாவில் பங்கேற்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

" குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் நாளை வெள்ளிக்கிழமை (18.08.2023) காலை பொங்கல் வழிபாடு இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்த விடயமானது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டநிலையில் சைவவழிபாடுகளை மேற்கொள்வதற்கு தடையில்லை என்று தொல்லியல் திணைக்களம் அறிவித்திருந்தது.

நீதிமன்று அனுமதி

தமிழர் மரபுகளைப் பேணிக்காக்க அணிதிரளுங்கள் - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு | Kurundurmalai Issue Jaffna U S U Call Tamils

பொங்கல் வழிபாட்டை தடுப்பதற்கு அரச தரப்பினர் மற்றும் தமிழ்ச் சமூக விரோதத் தரப்புகளால் இறுதிவரை பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், " பொங்கல் வழிபாட்டைத் தடுப்பதற்கு அதிகாரம் இல்லை " என்று முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

அத்துடன் சிறிலங்கா காவல்துறையினரின் தடையுத்தரவுக் கோரிக்கையையும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று நிராகரித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கான அழைப்பு

தமிழர் மரபுகளைப் பேணிக்காக்க அணிதிரளுங்கள் - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு | Kurundurmalai Issue Jaffna U S U Call Tamils

எனவே பேரினவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்துவரும் இந் நிலையில் எமக்கான உரிமைகளை மீட்டெடுக்கவும் எமது மரபுகளை பேணிக்காக்கவும் மக்கள் அனைவரும் குருந்தூர்மலைக்கு நாளை வருகை தந்து பொங்கல் விழாவை சிறப்பிக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்

தமிழர் மரபுகளைப் பேணிக்காக்க அணிதிரளுங்கள் - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு | Kurundurmalai Issue Jaffna U S U Call Tamils

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் ஆகும்.

இங்கே எமது வரலாறுகளை மறைக்கும், மழுங்கடிக்கும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் " - என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025