நாங்கள் உங்கள் அடிமைகள் கிடையாது - நாடாளுமன்றில் கர்ஜித்த கஜேந்திரன்
முல்லைத்தீவு குருந்தூர்மலைப் பகுதியிலுள்ள காணிகள் சிங்களவர்களுக்கு சொந்தமானது என பேராசிரியர் எல்லாவல மேதானந்த தேரர் எழுதிய கடிதத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆமோதித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கண்டனம் வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர்மலைப் பகுதியில் இருந்து தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு, அங்கு சிங்களவர்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டி காட்டியுள்ளார்.
சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் இராணுவ இயந்திரத்தையும், காவல்துறை இயந்திரத்தையும், அரச இயந்திரங்களையும் பயன்படுத்தி தமிழ் தேசத்தின் மீது மிகத் தீவிரமான ஒடுக்கு முறைகளை தீவிரப்படுத்திருக்கின்றார்கள்
பின் கதவால் ஆட்சிப் பீடம் ஏறிய அதிபர் ரணில் விக்ரமசிங்க தென்னிலங்கையில் தனது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக இனவாதிகளின் விருப்பங்களுக்கு ஏற்றபடி ஆடுகின்ற செயற்பாடுகளையும் அவதானிக்க முடிகிறது.
தமிழர்களுடைய தேசத்திலே நீங்கள் மேற்கொள்கின்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
