குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது
Kurunegala
Sri Lanka
By Beulah
குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதி மல்சிறிபுர பிரதேசத்தில் இருந்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
குருநாகல் தம்புள்ளை வீதியில் ஓமரகொல்ல பாடசாலைக்கு முன்பாக வீதியின் ஓரத்தில் இருந்த பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
வீழ்ந்த மரத்தை அகற்றும் வரை வாகன சாரதிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
