குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் காலமானார் : இரங்கல் தெரிவித்துள்ள அலி சப்ரி!
எண்ணெய் வளம் மிக்க குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா, மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அவர் தனது 86 ஆவது வயதில் காலமானார்.
குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் ஷேக் நவாஃப் உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் நலக்குறைவு
இதனை தொடர்ந்து, அவரது உடல் நலம் மேம்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (16) காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
திம்பு முதல் இமாலயப் பிரகடனம் வரை தமிழருக்கு சவால் : அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தலில் ரகுராம் சுட்டிக்காட்டு! (படங்கள்)
ஷேக் நவாஃப், கடந்த 2006 ஆம் ஆண்டில் அவரது சகோதரர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபாவால் கிரீட இளவரசராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, ஷேக் சபா கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்ததையடு்த்து, மன்னராக பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரங்கல் தெரிவித்துள்ள அலி சப்ரி
இதேவேளை, குவைத் மன்னரின் இழப்புக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபாவின் தலைமை மற்றும் அவரது தேசத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவை இந்த சவாலான நேரத்தில் நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலாக இருக்கட்டும் என பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
I extend my deepest condolences on the passing away of Amir of the State of Kuwait, His Highness Sheikh Nawaf Al-Ahmad Al-Jaber Al-Sabah. Our thoughts and prayers are with the people of Kuwait during this period of mourning. May his legacy, leadership and dedication to his nation…
— M U M Ali Sabry (@alisabrypc) December 16, 2023
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |