சிறீதரன் விரைவில் முகவரி அற்றுப் போய் விடுவார் - எச்சரிக்கும் கே வி தவராசா

Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran S. Sritharan K.V.Thavarasha
By Thulsi Nov 04, 2024 04:03 AM GMT
Report

தமிழரசு கட்சியில் இருந்த சிறீதரனும் எம்மோடு சேர்ந்து விலகி இருக்க வேண்டும், ஆனால் அவதை அவர் செய்யவில்லை விரைவில் அவர் முகவரி அற்றுப் போய்விடுவார் என ஜனாதிபதி சட்டத்தரணியும் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் மாம்பழ சின்ன முதன்மை வேட்பாளரான கே வி தவராசா (K.V. Thavarasha) தெரிவித்துள்ளார்.

யாழ். (Jaffna) கந்தர் மடப்பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் (3.11.2024) இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் வடக்கில் பிறந்து தெற்கில் தொழில் நிமிர்த்தம் வாழ்ந்து வரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசை இருந்திருந்தால் 14 வருடங்களாக தமிழரசு கட்சியில் எனது காலத்தை கழித்திருக்க மாட்டேன்.

கருணா - பிள்ளையான் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: நால்வர் கைது

கருணா - பிள்ளையான் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: நால்வர் கைது

தெற்கின் பிரதான அரசியல் கட்சி

நாட்டை ஆட்சி புரிந்த ஜனாதிபதிகளாக இருந்தாலும் பிரதமர்களாக இருந்தாலும் தெற்கின் பிரதான அரசியல் கட்சிகளின் தெற்கின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருந்தாலும் சரி அனைவரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும்.

சிறீதரன் விரைவில் முகவரி அற்றுப் போய் விடுவார் - எச்சரிக்கும் கே வி தவராசா | Kv Thavarasa Blame Sridharan

எனக்கு அவ்வாறு ஆசை இருந்திருக்கவில்லை, தமிழ் தேசியத்தை கட்டி காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தந்தை செல்வாவின் மறை நிகழ்வில் கொடிகள் கட்டிய போது எனக்கு ஏற்பட்டது.

அந்த எண்ணத்தில் தமிழரசு கட்சியில் இணைந்தேன் 14 வருடங்கள் பயணித்தேன், பல்வேறு தவறுகளை தலைவருக்கு சுட்டிக்காட்டினேன் ஆனால் எவையும் நிவர்த்தி செய்யப்படவில்லை.

தமிழ் தேசியத்தை அழிக்கும் செயற்பாடு கட்சிக்குள் இடம்பெற்று வருகின்றமையை தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற காரணத்தினால் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் காவல் நிலையத்தில் முறைப்பாடு

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் காவல் நிலையத்தில் முறைப்பாடு

தமிழ் மக்களின் இனப்படுகொலை

தமிழரசு கட்சியில் இருந்த சிறிதரனும் எம்மோடு சேர்ந்து விலகி இருக்க வேண்டும் ஆனால் அவதை அவர் செய்யவில்லை விரைவில் அவர் முகவரி அற்றுப் போய்விடுவார்.

சிறீதரன் விரைவில் முகவரி அற்றுப் போய் விடுவார் - எச்சரிக்கும் கே வி தவராசா | Kv Thavarasa Blame Sridharan

சசிகலா ரவிராஜ் எம்மோடு சேர்ந்து பயணித்திருக்க வேண்டும், ஆனால் காலம் போதாது அவரை இணைத்து பயணிக்க முடியவில்லை சுமந்திரன் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான நீதிக்கு கால அவகாசம் முடிந்து விட்டது தமிழர்கள் சமஸ்டித் தீர்வை கைவிட்டு விட்டார்கள் என கொழும்பில் கூறினார்.

தேர்தல் வந்ததும் வடக்கில் தமிழ் மக்கள் சமஷ்டித் தீர்வை எதிர்பார்க்கிறார்கள் அவற்றை அடைவதற்கு எமக்கு வாக்களியுங்கள் என கேட்கிறார்.

சுமந்திரன் தொடர்பில் நாங்கள் கூற வேண்டிய தேவை இல்லை மக்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் அவர்கள் தமது வாக்குகள் மூலம் பதிலை வழங்குவார்கள் என கே வி தவராசா தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுடன் பயன்பெறப்போகும் மற்றொரு தரப்பினர்: அநுர வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களுடன் பயன்பெறப்போகும் மற்றொரு தரப்பினர்: அநுர வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016