பெண்களே..! இந்த ஐந்து பொருட்கள் உங்கள் சமையலறையில் இருந்தால் நீங்களும் மருத்துவர் தான்

Ginger
By Kathirpriya Aug 15, 2023 11:49 AM GMT
Report

பொதுவாக மழைக்காலங்களில் நமக்கு பலவகையான பிரச்சனைகள் வருவதுண்டு. காய்ச்சல், சளி, இருமல், தடிமன், தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் என பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவது வழக்கம்.

இந்த தொற்று நோய்களுக்கு நம்முடைய முன்னோர்கள் வீட்டிலேயே கைமருத்துவம் செய்து நோயை தீர்த்துக் கொள்வது வழக்கம்.

ஆனால் தற்போது நாம் தொட்டதற்கெல்லாம் மருத்துவமனைகளுக்குத் தான் அடிக்கடி சென்று வருகிறோம். மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவது முக்கியமென்றாலும்,உணவே மருந்து என்று நம் முன்னோர் காட்டிய வழியை தவறவிடுவது தவறு தானே.

அதிக செலவும் இன்றி பாதுகாப்பு பொறிமுறைகளை இன்றி அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்தே பல நோய்களை எளிதில் எங்களால் வெல்ல முடியும் அல்லவா.

மழைக்காலங்களில் மட்டுமல்ல எப்போதும் நம்முடைய சமையலறையில் இருக்க வேண்டிய ஐந்து முக்கியமான பொருட்கள் பற்றி பார்ப்போம்.

இஞ்சி

பெண்களே..! இந்த ஐந்து பொருட்கள் உங்கள் சமையலறையில் இருந்தால் நீங்களும் மருத்துவர் தான் | Ladies You Must Have These 5 Items In Your Kitchen

இஞ்சி என்பது பொதுவாக நாம் நமது பெரும்பாலான சமையல்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள். இஞ்சியில் ஜிஞ்சரோல்ஸ், பாரடோல்ஸ், செஸ்கிடர்பீன்ஸ், ஷோகோல்ஸ் மற்றும் ஜிங்கரோன் ஆகியவை உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இது சளி மற்றும் காய்ச்சலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கருமிளகு

பெண்களே..! இந்த ஐந்து பொருட்கள் உங்கள் சமையலறையில் இருந்தால் நீங்களும் மருத்துவர் தான் | Ladies You Must Have These 5 Items In Your Kitchen

கருமிளகில் பலவகையான இயற்கை ஆரோக்கியம் நிறைந்த பண்புகள் உள்ளது. அந்த வகையில், குடல் வாயு மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சினைகளின் வாய்ப்பைக் குறைப்பதோடு, அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற, பக்டீரியா எதிர்ப்பு மற்றும் காய்ச்சலை குறைக்கும் தன்மை கொண்டது.

மஞ்சள்

பெண்களே..! இந்த ஐந்து பொருட்கள் உங்கள் சமையலறையில் இருந்தால் நீங்களும் மருத்துவர் தான் | Ladies You Must Have These 5 Items In Your Kitchen

மஞ்சள் நமது உடலில் பல பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய சிறந்த மூலிகை ஆகும். அந்த வகையில், மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

வெள்ளைப்பூடு

பெண்களே..! இந்த ஐந்து பொருட்கள் உங்கள் சமையலறையில் இருந்தால் நீங்களும் மருத்துவர் தான் | Ladies You Must Have These 5 Items In Your Kitchen

வெள்ளைப்பூடு நமது அனைத்து சமையல்களிலும் பயன்படுத்தக் கூடிய ஒரு பொருள் ஆகும். வெள்ளைப்பூடில் அல்லிசின் என்ற கலவை உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய தொற்று நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

துளசி 

பெண்களே..! இந்த ஐந்து பொருட்கள் உங்கள் சமையலறையில் இருந்தால் நீங்களும் மருத்துவர் தான் | Ladies You Must Have These 5 Items In Your Kitchen

துளசி இயற்கை மருத்துவத்திற்கு ஒரு சிறந்த மருந்து ஆகும். துளசி உடலில் தீங்கு விளைவிக்கும் பிறபொருளெதிரிகளை எதிர்த்துப் போராடும் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த துளசியை பயன்படுத்தி தேநீர் செய்து குடித்து வந்தால், இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

மழைக்காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த வேளையிலே இந்த பதிவு உங்களுக்கு அவசியமான நேரத்தில் கைகொடுக்கும். 

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025