பெண் வைத்தியருக்கு நீதி கோரி வவுனியாவில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
நாடளாவிய ரீதியல் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள நிலையில் வவுனியாவிலும் (Vavuniya) வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இன்றைய தினம் (12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதனால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (10) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் (Anuradhapura teaching hospital) வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.
அடையாள பணிப்புறக்கணிப்பு
இதற்கு நீதிகோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பானது வவுனியா வைத்தியசாலையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
