நேபாளத்தை தாக்கப்போகும் இரண்டாவது வெள்ளப்பெருக்கு : சீனா எச்சரிக்கை
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது உருவாகி உள்ள ஏரியில் சுமார் 25 இலட்சம் கனமீற்றர் நீர் தேங்கியுள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த வார இறுதி வரை மேலும் சுமார் 30 இலட்சம் கனமீற்றர் நீர் ஏரிக்குள் வரக்கூடும் என்பதால், ஏரி உடையும் அபாயம் அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Chhochen Khola மற்றும் Purepu Tsangpo ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் உருவான இந்த ஏரி ஏற்கனவே கரைபுரண்டு வழியத் தொடங்கியுள்ளதாக சீன நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனா எச்சரிக்கை
அப்பகுதியில் தொடர்ச்சியாக கடும் மழையும் பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் மற்றும் வானிலை நிலைமைகளை கண்காணிப்பதற்காக பொறியியல் குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.

புதிய வெள்ளம் அல்லது மண் குப்பைகள் அடங்கிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காரணமாக, நேபாள - திபெத் எல்லைக்கு அருகிலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, நேபாள அதிகாரிகள் Bhote Koshi மற்றும் Trishuli ஆறுகளில் அடைப்புகள் ஏற்பட்டு மீண்டும் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரித்து, மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் ஆற்றுப் பகுதிகளிலிருந்து விலகியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவுக்கு Langtang Lirung மலைப்பகுதியில் பனிப்பாறையின் ஒரு பகுதி ஆற்றுக்குள் சரிந்து விழுந்ததே காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நீர் மற்றும் குப்பைகள் பெரும் வேகத்தில் கீழ்நோக்கி அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நேபாளத்தில் பல நூறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
திபெத் பகுதியில் மட்டும் 550க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் கிட்டத்தட்ட அரைவாசிபேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |