நேபாள வெள்ளப் பேரழிவுக்கு காரணம்! அதிகரிக்கும் பலி: சிக்கிய தமிழர்களின் நிலை

Vijay Tamil nadu Earthquake Nepal Flood
By Thulsi Aug 28, 2026 02:55 AM GMT
Report

சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் மரண எண்ணிக்கை 359 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் வீடுகளை அழித்து, சாலைகளை மூழ்கடித்து, பாலங்களை அடித்துச் சென்றதை அடுத்து, நேபாளம் மற்றும் திபெத்தில் மீட்புக் குழுவினர் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேபாளத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. அதேசமயம் திபெத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 550-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மார்பில் வைத்திருந்த தொலைபேசி வெடித்து 19 வயதுடைய இளைஞன் பலி

மார்பில் வைத்திருந்த தொலைபேசி வெடித்து 19 வயதுடைய இளைஞன் பலி

காணாமல் போனவர்களைத் தேடுதல்

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா, நேபாள இராணுவம், ஆயுதப் படை மற்றும் தேசிய காவல்துறையை சேர்ந்த 13,000க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நேபாள வெள்ளப் பேரழிவுக்கு காரணம்! அதிகரிக்கும் பலி: சிக்கிய தமிழர்களின் நிலை | 389 Killed In Flash Flood Disaster In Nepal

இன்றைய தினத்தில் மட்டும் வான்வழியாக 573 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்களைக் காப்பாற்றுதல், காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றுக்கே அரசாங்கம் முதன்மை முக்கியத்துவம் அளிப்பதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கை சுட்டெரிக்கப்போகும் வெயில்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு கிழக்கை சுட்டெரிக்கப்போகும் வெயில்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

சிக்கியுள்ள தமிழர்கள்

இந்த நிலையில் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

நேபாள வெள்ளப் பேரழிவுக்கு காரணம்! அதிகரிக்கும் பலி: சிக்கிய தமிழர்களின் நிலை | 389 Killed In Flash Flood Disaster In Nepal

அதைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழு நேபாளம் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமில்லை

இவ்வாறான நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேபாள வெள்ளப் பேரழிவுக்கு காரணம்! அதிகரிக்கும் பலி: சிக்கிய தமிழர்களின் நிலை | 389 Killed In Flash Flood Disaster In Nepal

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் தான் காரணம் என்றும் அது ரிக்டர் அளவுகோலில் 4.4 எனப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முன்னதாக கூறியிருந்தது.

இந்த நிலையில் "நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் காரணம் அல்ல, பனிப்பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதால்தான் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் பனிப்பாறை ஏன் உடைந்தது என்பதற்கு காரணம் தெரியவில்லை.

அந்த பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட அதிர்வு 5.2 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. நில அதிர்வு தரவுகள், அதிர்வு அலைகள், செயற்கைக் கோள் படங்கள் ஆகியவற்றின் மூலமாக இது கண்டறியப்பட்டுள்ளது." என்று விளக்கம் தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் இளைய மகனை கொலை செய்ய திட்டம்! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ட்ரம்பின் இளைய மகனை கொலை செய்ய திட்டம்! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026