ட்ரம்பின் இளைய மகனை கொலை செய்ய திட்டம்! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான பெரொன் ட்ரம்பை (Barron Trump) கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ஈரான் முற்றாக நிராகரித்துள்ளது.
ஈரானின் பாதுகாப்பு தலைவர் மொஹ்சென் ரெஸாயி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
லெபனான் ஊடகமொன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், இந்த விவகாரம் குறித்து பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஈரானின் விளக்கம்
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதியின் 18 வயதான இளைய மகன் பெரொன் ட்ரம்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது குறித்து ஈரானிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளிப்பதிவு தொடர்பாகத் தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக அமெரிக்க ரகசிய சேவை அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்த செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலேயே, ஈரானிய தரப்பிலிருந்து இந்த விளக்கமும் மறுப்பும் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! ' |