எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ஆளும் தரப்பு உறுப்பினர்கள்!
சிறிலங்கா பொதுசன பெரமுன அதிகார ஆளுகைக்கு உட்பட்ட லக்கல பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும் எதிரணியுடன் இணைந்து ஆளும் தரப்பினர் இன்றைய தினம் தோற்கடித்துள்ளனர்.
லக்கலை பிரதேச சபையின் தலைவர் புத்திக சேனாரத்ன இரண்டாவது முறையாகவும் இன்று வரவு - செலவுத்திட்டத்தை சமர்பித்தார். வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக 11 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் ஆதரவாக 6 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சியின் 5 உறுப்பினர்கள், சிறிலங்கா பொதுசன பெரமுனவின் மூன்று உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினர் என 11 பேர் வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக பிரதேச சபையின் தலைவர் உட்பட சிறிலங்கா பொதுசன பெரமுனவின் 6 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
கடந்த 25 ஆம் திகதி முதல் தடவையாக வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதுடன் இன்று இரண்டாவது முறையாகவும் திட்டம் தோற்கடிக்கபட்டுள்ளது.