யாழில் இன்றும் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு முயற்சி - பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!
கடற்படையினருக்கு நிரந்தரமாக காணி வழங்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட காணி அளவீட்டு முயற்சி மக்களின் எதிர்பால் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு,மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் செம்பியன்பற்று வடக்கு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாகவே சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிறு (23) தொடக்கம் தொடர்ந்து நாலாவது நாளாக இன்றும் (27) காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது.
பிரதேச மக்களுடன் மேலும் பலர்

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான ஏறத்தாழ 15 பேர்ச் (ஒன்றரை பரப்பு) காணியை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்கில் இந்த அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மக்கள் தங்கள் உரிமை கோரியும் சொந்த நிலத்தை இழக்க இயலாது என்ற எண்ணத்துடனும் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் குறித்த காணி அளவீட்டுத் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
இதன்போது பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.