காணி தகராறு - ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை!
காணி தகராறு காரணமாக நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பனாமுர ஓமல்பே பகுதியில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஓமல்பே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பனாமுர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை வெளி நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.00 மணியளவில் அவர் தனது வீட்டிற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளானவர் மருதானை, ஆனந்த மாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவராவார்.
இன்று காலை நோயாளர்களைப் பார்வையிடச் செல்லும் போர்வையில் வந்த சந்தேக நபர் மீண்டும் வைத்தியசாலையின் படுக்கை தொகுதிக்குச் சென்று கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
