மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் காணி அபகரிப்பு: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மன்னார்(Mannar) மாவட்டத்தில் பல்வேறு கோணங்களில் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்ற போதும்,இது வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனவே நாட்டின் ஜனாதிபதி ,இதற்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இன்றையதினம் (06.08.2024) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கணிய மணல் அகழ்வு திட்டத்தை முன்னெடுப்பதற்கான பாரிய முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது பல்வேறு கம்பனிகளால் இறுதியில் ஒரு கம்பெனி ஒன்று கணிய மணல் அகழ்வுக்காக மன்னார் மாவட்டத்தில் கால் பதித்துள்ளது.
குறித்த கம்பெனி குறித்த இடத்தை கையகப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்க பல்வேறு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது.
மக்கள் சார்பாக நாங்கள், பொது அமைப்புக்கள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்ற போதும்,குறித்த நடவடிக்கையை செயல்படுத்த பல்வேறு அரச நிறுவனங்களின் முயற்சியுடன் வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் 14 ஆம் திகதி கணிய மணல் அகழ்வு செய்யப்படவுள்ள இடங்களை நிள அளவீடு செய்ய சுமார் 32 அரச திணைக்களங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |