37 வருட அரசியலில் தமிழ் மக்கள் கற்றுக்கொண்ட பாடம் : கேள்விக்குறியாகும் மாகாணசபை
மாகாண சபை என்பது இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையலாம் என சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சண்முகதாஸ் உள்ளிட்ட பலர் தெரிவித்திருந்தாலும் அது ஒரு போதும் தீர்வாக அமையவில்லை என்பதற்கு தற்போதுள்ள 37 வருட அரசியல் வரலாறு சாத்தியமாகவுள்ளதாக அரசியல் ஆய்வாளர் அருள் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை ஐ.பி.சி தமிழ் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இதற்கு காரணம் 13 ஆவது சட்டத்திருத்தம் இலங்கை நாடாளுமன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இவ்வாறான வரலாற்று பின்புலத்தை உற்று நோக்கும் போது ஐம்பது வயது வரை விரோதியாக இருந்தவர்கள் தற்போது தமிழர்களுக்கு தீர்வு வழங்குவார்களா என்பது கேள்விக்குரிதான்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் அரசியல் களம், அநுரவின் வரலாற்று பின்புலம், தமிழ் மக்கள் மீதான அநுரவின் கரிசனை மற்றும் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய அகளங்கம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |