இலங்கை - இந்தியா இடையிலான தரைவழிப் பாதை : அநுர அரசின் நிலைப்பாடு
இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான தரைவழி பாதைத் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக தாம் காத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி போக்குவரத்து தொடர்பிலான யோசனையை, இலங்கை அரசாங்கமே முன்வைத்தது.
எட்கா உடன்படிக்கை
அதனை முன்னெடுத்துச் செல்ல, இந்தியா தயாராக இருக்கிறது. எனினும், இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை.

அத்துடன் இலங்கை - இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையான எட்கா தொடர்பிலும் இலங்கையின் பதிலை இந்தியா எதிர்பார்த்திருக்கின்றது.
இதேவேளை, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எரிபொருள் விநியோக கட்டமைப்புத் தொடர்பில் நிதியளிப்பு தொடர்பான ஆலோசனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்திய வீடமைப்பு திட்டம்
மேலும், இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 3300 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், எஞ்சிய 6700 வீடுகளை டித்வா பாதிக்கப்பட்ட அல்லது, எதிர்காலத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்படவுள்ள மக்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக” தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 7 மணி நேரம் முன்